| தேசியம் |
| மகளிர் மசோதா விவகாரம் - மக்களவை ஒத்திவைப்பு |
|
|
|
| Wednesday, 10 March 2010 13:30 |
|
மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் ஏற்பட்ட அமளியால் அவை ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை அவை கூடியதும் வழக்கமான நடவடிக்கைகளை தொடங்க சபாநாயகர் மீரா குமார் அழைப்பு விடுத்தார். அப்போது லாலு, முலாயம் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். லாலு, முலாயம் மற்றும் சரத் யாதவ் ஆகியோர் அவையின் மையப் பகுதிக்கு வந்து கோஷங்கள் எழுப்பி ரகளையில் ஈடுபட்டனர். இதனால் சபாநாயகர் மீரா குமார் அவையை 12 மணி வரை ஒத்திவைத்தார். அவை ஒத்திவைக்கப்பட்டதும் சபைக் காவலர்கள் அவையில் பத்திரிகையாளர் மாடம் மற்றும் அலுவலர்கள் பகுதியில் இருந்து பேப்பர், பேனா உள்ளிட்டவைகளை அப்புறப்படுத்தினர். நேற்று முன்தினம் மாநிலங்களவையில் உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டது போன்ற சம்பவம் நிகழாமல் தவிர்க்க இவ்வாறு செய்தனர். இதனிடையே அவை ஒத்திவைக்கப்பட்டதும் ஏராளமான காங்கிரஸ் உறுப்பினர்கள் சோனியா காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரிடம் சென்று மாநிலங்களவையில் மகளிர் மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்தனர். |
| | எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து | |