Thursday
Sep 09th
கிரிக்கெட்
கிரிக்கெட் - யூசுப், யூனிசுக்கு ஆயுள் தடை PDF Print E-mail
Wednesday, 10 March 2010 13:23
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் முகம்மது யூசுப் மற்றும் யூனிஸ் கான் ஆகிய இருவருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆயுட்காலத் தடை விதித்துள்ளது.

சமீபத்தில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இவர்களது மோசமான ஆட்டத்திற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இவர்கள் தவிர ஷோயப் மாலிக் மற்றும் ரானா நாவித் ஆகியோருக்கு ஓராண்டு தடையும், ஆல் ரவுண்டர் ஷாஹித் அப்ரிடிக்கு பந்தை சேதப்படுத்தியதற்காக அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கம்ரான் அக்மல் மற்றும் உமர் அக்மல் சகோதரர்கள் ஆறு மாதம் பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

முறைகேடான செயல்களில் ஈடுபடும் வீரர்களுடன் எந்த சமரசமும் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசாரணைக் குழு கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து இந்த கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Last Updated ( Wednesday, 10 March 2010 13:26 )
 
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |