Wednesday
Sep 08th
சர்வதேசம்
ஒபாமாவின் நோபல் பரிசுப் பணம் என்னவாயிற்று? PDF Print E-mail
Wednesday, 10 March 2010 11:39
லாட்டரியில் பரிசு விழுந்து பல மாதங்கள் ஆனாலும் பரிசுத் தொகை கைக்கு வந்து சேரவில்லையே என்று பலரும் ஏங்குவதுண்டு. ஆனால் அமெரிக்க அதிபருக்கும் இதே போன்ற நிலைதானாம்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு 3 மாதங்கள் ஆகி விட்டன. ஆனால் பரிசுத் தொகையான 1.4 மில்லியன் டாலர் இன்னும் அவரது கைக்கு வந்து சேரவில்லையாம்.

நோபல் பரிசுடன் தமக்கு அளிக்கப்படும் பரிசுத் தொகையை அறக்கட்டளைகளின் அறப்பணிகளுக்கு வழங்கப் போவதாக பரிசு பெற்ற மேடையிலேயே ஒபாமா அறிவித்திருந்தார். இதுபற்றி வெள்ளை மாளிகையில் செய்தித் தொடர்பாளரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்களாம்.

அந்தப் பணம் இன்னும் ஒபாமாவுக்கு வந்து சேரவில்லை என்றும் அது அநேகமாக நோபல் பரிசுக் குழுவிடம் தான் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தாராம்.
Last Updated ( Wednesday, 10 March 2010 11:40 )
 
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |