| செய்திகள் - தமிழகம் |
| மகளிர் இட ஒதுக்கீட்டில் தமிழகம் முதலிடம் பெறும் : அன்பழகன் |
|
|
|
| Wednesday, 10 March 2010 06:42 |
|
மகளிருக்கான 33 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கும் என்று மாநில நிதியமைச்சர் க.அன்பழகன் தெரிவித்தார். கோவை- புலியகுளத்தில் திமுக சார்பில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறினார். சென்னை, மதுரை, தஞ்சையைத் தொடர்ந்து கோவைக்கு செம்மொழி மாநாட்டின் மூலம் பெருமை கிடைத்துள்ளது என்றும் மாநாட்டை ஒட்டி கோவையின் வளர்ச்சிக்காக ரூ.300 கோடியை ஒதுக்கி பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார். மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பே திமுக அரசு உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு அத்தகைய இடஒதுக்கீட்டை வழங்கிவிட்டது. மாநிலங்களவையைத் தொடர்ந்து மக்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்படும். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு குறைந்தது 15 மாநில சட்டப் பேரவைகளின் ஒப்புதல் கிடைக்க வேண்டும். அந்த வகையில் தமிழகம் முதல் மாநிலமாக மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றும் என்று அன்பழகன் கூறினார். |
| | எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து | |