Wednesday
Sep 08th
தேசியம்
மகளிர் இடஒதுக்கீடு அமல் எப்படி இருக்கும்? PDF Print E-mail
Wednesday, 10 March 2010 06:34

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் எப்படி  அமல்படுத்தப்படும் என்பது குறித்த பார்வை வருமாறு:

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா, மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. பெண்களுக்கான தொகுதிகளை, அவ்வப்போது சுழற்சி முறையில் மாற்றிக்கொள்ள இந்த மசோதா வகை செய்கிறது.

மொத்தம் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் 181 தொகுதிகளையும், 28 மாநிலங்களில் மொத்தம் உள்ள 4 ஆயிரத்து 109 சட்டசபை தொகுதிகளில் ஆயிரத்து 370 தொகுதிகளையும் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய இந்த மசோதா வகை செய்கிறது.

இந்த இடஒதுக்கீடு, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட தனி தொகுதிகளுக்கும் பொருந்தும்.

543 பாராளுமன்ற தொகுதிகளில், 122 தொகுதிகள், தனி தொகுதிகள் ஆகும்.

ஒரு மாநிலத்திலோ, யூனியன் பிரதேசத்திலோ தனி தொகுதி ஒன்று மட்டும் இருப்பதாக வைத்துக்கொண்டால், அந்த தொகுதி, ஒரு பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சமுதாய பெண்களுக்கு ஒதுக்கப்படும். அடுத்து வரும் இரண்டு பொதுத்தேர்தல்களில் அது தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது.

அதே சமயத்தில், ஒரு மாநிலத்திலோ, யூனியன் பிரதேசத்திலோ 2 தனித்தொகுதிகள் இருப்பதாக எடுத்துக்கொண்டால், அவற்றில் ஒரு தொகுதி மட்டும், முதல் இரண்டு பொதுத்தேர்தல்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். மூன்றாவது பொதுத்தேர்தலில் அந்த சமுதாய பெண்களுக்கு எந்த தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது.

அனைத்து சாதியினரும் போட்டியிடும் பொதுத் தொகுதி, ஒரு மாநிலத்திலோ, ஒரு ïனியன் பிரதேசத்திலோ ஒரு தொகுதி மட்டுமே இருப்பதாக வைத்துக்கொண்டால், அந்த தொகுதி, ஒரு பாராளுமன்ற பொதுத்தேர்தலில் (அனைத்து சாதி) பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். அடுத்து வரும் இரண்டு பொதுத்தேர்தல்களில் பெண்களுக்கு இந்த தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது.

ஒரு மாநிலத்திலோ, ïனியன் பிரதேசத்திலோ பொதுத் தொகுதி இரண்டு இருப்பதாக வைத்துக்கொண்டால், முதல் இரண்டு பொதுத் தேர்தல்களில், ஒரு தொகுதி மட்டும், (அனைத்து சாதி) பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். அடுத்து வரும் மூன்றாவது பொதுத் தேர்தலில் எந்த தொகுதியும் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது. ஒவ்வொரு 3 பொதுத் தேர்தல்களுக்கும், இதே வரிசைப்படி, இட ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படும்.

 
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |