Thursday
Sep 09th
சர்வதேசம்
வாஷிங்டனின் முதல் ஓரினத் திருமணம் PDF Print E-mail
Wednesday, 10 March 2010 06:09

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் பழைய கட்டுப்பாடுகள் உடைக்கப்பட்டு எல்லையில் நேற்று அந்த நாட்டின் முதலாவது ஓரினத் திருமணம் நடைபெற்றது.

கொலம்பியா மாவட்டத்தின் புதிய ஓரினத் திருமண சட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தின் ஒப்புதல் கடந்த வாரம் பெறப்பட்டதைத் தொடர்ந்து ஏஞ்சலிசா யூத் என்ற பெண்மணியும், சின்ஜெய்லா டவுன்சென்ட் என்ற பெண்ணும் எல்ஜpபிடி என்ற ஓரினத் திருமண ஆதரவு மனித உரிமை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

வாஷிங்டனின் முதலாவது ஓரினத் தம்பதி இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே கனெக்டிகட், அயோவா, மசாஷுசெட்ஸ், நியூ ஹாம்ஸ்பயர், பெர்மாண்ட் ஆகிய மாவட்டங்களில் ஓரின திருமண சட்டம் இருப்பதை சுட்டிக்காட்டி கொலம்பியா மாவட்ட நிர்வாகத்தின் சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. இதனை எதிர்க்கும் மனுக்களை அது தள்ளுபடி செய்தது.

இதையடுத்து ஓரின திருமணம் செய்து கொள்ள விரும்புவோர் அதற்கான உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என்று திருமண பதிவாளர் அலுவலகம் விளம்பரம் செய்தது.

இதன் பின்னர் இந்தப் பகுதியின் முதல் ஓரின் தம்பதியாக யங் மற்றும் டவுன்சென்ட் திருமணம் செய்து கொண்டனர். தாங்கள் தம்பதிகளாக இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று யங் தெரிவித்தார்.

 
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |