| செய்திகள் - தமிழகம் |
| சட்டப்பேரவையில் கருணாநிதி படம் - ஜெ. கண்டனம் |
|
|
|
| Tuesday, 09 March 2010 17:10 |
|
தமிழக சட்டப்பேரவையில் கருணாநிதியின் படம் வைக்க முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஜனநாயக நெறிமுறைகளை மீறிய செயல் என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு : கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனநாயக நெறிமுறைகளை அரசியலிலும், ஆட்சியிலும் கடைபிடித்து வருவதுடன், தமிழக மக்களின் தரம் உயர தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்கள் தீட்டிப் பணியாற்றி வருபவர் என்று அவரை வருணித்து, இவ்வாறு இந்த மாமன்றத்திற்கு சிறப்பு சேர்த்து வரும் கருணாநிதியின் உருவப்படத்தை புதிய சட்டசபை வளாகத்திலும், பழைய சட்டசபை வளாகத்திலும் வைக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இது சட்டமன்ற மரபுகளுக்கு முரணான செயல். எம்.ஜி.ஆரின் உருவப்படம் திறந்து வைக்க அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். அதன் அடிப்படையில், எம்.ஜி.ஆர். உருவப்படம் இந்த மாமன்றத்திலே திறந்து வைக்கப்பட்டது. |
| | எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து | |