| தேசியம் |
| தெலுங்கானா - மேலும் ஒரு மாணவர் தற்கொலை |
|
|
|
| Tuesday, 09 March 2010 17:03 |
|
தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதில் ஏற்படும் தாமதத்தால் விரக்தி அடைந்த மேலும் ஒரு மாணவர் ஐதராபாத்தில் இன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பிடெக் பயிலும் சாய் குமார் என்ற அந்த மாணவர் இன்று தனது விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். இறக்கும் முன் எழுதி வைத்துள்ள கடிதத்தில் அவன், தெலுங்கானா மாநிலம் அமைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் விரக்தி அடைந்து தாம் இந்த முடிவை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளான். விடுதியில் உள்ள சில மாணவர்கள் அவன் மின்விசிறியல் தொங்குவதைப் பார்த்து போலீசுக்கு தகவல் தொடுத்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்று போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து நாளை நடைபெறுவதாக இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே ஒரு மாணவர் தீக்குளித்து இறந்த நிலையில் தற்போது இன்னொரு மாணவன் தறகொலை செய்து கொண்டிருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| | எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து | |