| அஜித்தின் 50வது படம் காவல் |
|
|
|
| Monday, 08 March 2010 14:25 |
|
அசல் படத்தின் வெற்றி மகிழ்ச்சியை அளிப்பதாக அமைந்திருந்த போதிலும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சைகளால் வருத்தத்தில் இருந்த அஜித் தற்போது தனது 50வது படத்திற்கான பணிகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டார். தயாநிதி அழகிரி தயாரிக்கும் புதிய படத்தில் அஜித் ஒப்பந்தம் ஆகியிருப்பது பழைய செய்தி. தற்போது அந்தப் படத்தை கவுதம் மேனன் இயக்க இருப்பதும், அந்தப் படத்திற்கு காவல் என பெயரிடப்பட்டிருப்பதும் புதிய செய்தி. ஏற்கெனவே இந்தப் படத்திற்கு துப்பறியும் ஆனந்த் என பெயரிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கவுதம் மேனன் காவல் என்ற பெயரை பதிவு செய்ய பிலிம் சேம்பரில் விண்ணப்பித்துள்ளார். எனவே இது தான் படத்தின் பெயர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த 1985ம் ஆண்டு காவல் என்ற பெயரில் தியாகராஜன் - நளினி நடித்த படம் ஒன்று வந்தது. ஆனால் அதற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. காவல் படத்தின் துவக்க விழா விரைவில் நடைபெறும் என்று தெரிகிறது. தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் காவல்துறை தலைவர் இதில் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிகிறது. |
| Last Updated ( Monday, 08 March 2010 14:28 ) |
| | எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து | |